New School Building Opening @ Royapuram Mandal
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள் இன்று ராயபுரம் மண்டலம், வார்டு- 59க்குட்பட்ட எல்லிஸ்புரம்பகுதியில்சிங்காரச்சென்னை 2.0 திட்டநிதியின் கீழ் ரூ 1.62 கோடி மதிப்பீட்டில் புதிதாககட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப்பள்ளி கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்துவைத்தனர்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள் இன்று (11.06.2024) ராயபுரம் மண்டலம், வார்டு- 59க்குட்பட்ட எல்லிஸ் புரம் பகுதியில் சிங்காரச் சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ்
ரூ 1.62 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய ஆறு வகுப்பறைகளைக் கொண்ட புதிய சென்னை நடுநிலைப்பள்ளி கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையர்
திரு. கட்டாரவி தேஜா, இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் திரு.பி. ஸ்ரீராமுலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு : இணை இயக்குநர்/மக்கள் தொடர்பு அலுவலர்,
பெருநகர சென்னை மாநகராட்சி